எங்கும் கற்பிக்கலாம்

மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர்வதில் ஆசிரியர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவும் விதமாக கருவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது.

  • Google
  • UNESCO

உங்களுக்கேற்ற கருவிகளைத் தேர்வுசெய்யுங்கள்

ஆசிரியர்களுக்கானவை
பள்ளிகளுக்கானவை
குடும்பத்திற்கானவை

ஆசிரியர்களுக்கானவை

Google Workspace for Education கணக்கு இல்லையா? எங்களது கருவிகளை எந்தக் கட்டணமும் இல்லாமல் பெற, உங்கள் நிர்வாகி எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பதை அறிய 'பள்ளிகள்' தாவலைப் பாருங்கள்.

சமீபத்திய வரவு

  • பாடம் நடத்த மற்றும் கற்க பயன்படும் புதிய Google Meet ஃபீச்சர்ஸ்

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாக உள்ள Google Meet-ன் புதிய ஃபீச்சர்ஸ் பற்றி அறிந்திடுங்கள். இது தொலைதூரத்தில் இருந்தபடியும், ஆன்லைனிலும் கல்வி கற்பிக்கும் சூழலில் வகுப்பறையை நிர்வகிக்க மேம்பட்ட கட்டுப்பாடுகளும், மாணவர்கள் பங்கேற்றலை ஊக்குவிக்கவும் கல்வியாளர்களுக்கு உதவும்.

    மேலும் அறிய
  • ஒவ்வொருவருக்கும் இனி தனித்தனி Assignments

    Assignments என்பது கல்வி நிர்வாக அமைப்புகளுக்கான ஆப்ஸ் ஆகும். இது Google Workspaceஸின் கூட்டுப்பணியாற்றும் திறன் மூலமாக விரைவாகவும் எளிதான முறையிலும் வீட்டுப்பாடங்களை மாணவர்களுக்கு வழங்கவும், அவற்றைத் திருத்தி மதிப்பீடு வழங்கவும் உதவுகிறது.

    மேலும் அறிய
  • வகுப்புகளை கையாள உதவும் புதிய Classroom ஃபீச்சர்ஸ்

    வகுப்பறை அமைத்தலை மேம்படுத்தும் இந்த புதிய சிறப்பம்சம், அசைன்மெண்ட்களை கண்காணிக்கவும், அவற்றை புரிந்து கொள்ளவும் உங்களுக்கு உதவும். மேலும், முதல்-முறை பயன்படுத்துபவர்களுக்கான புதிய வசதிகளும் உள்ளன.

    மேலும் அறிய

தொலைவில் இருந்து வீடியோ அழைப்புகள் மூலம் கற்பிப்பது எப்படி?

  • வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றவாறு வீட்டுச் சூழலை உருவாக்குங்கள்

    வலுவான வைஃபை சிக்னலும் அதிகமான சூரிய வெளிச்சமும் தெளிவான பின்னணியும் இருக்கும் ஒரு இடத்தைக் கண்டறியுங்கள்.

  • உங்கள் வகுப்பினருடன் வீடியோ அழைப்பைத் தொடங்குங்கள்.

    Google Meet மூலம் வீடியோ அழைப்புகளை உருவாக்கி வகுப்பினர் அனைவரையும் பங்கேற்க அழைக்கலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • உடனடியாகப் பிளேபேக் செய்வதற்கு உங்கள் பாடங்களை ரெக்கார்டு செய்யுங்கள்

    உங்கள் பாடங்களை ரெக்கார்டு செய்வதால் உங்கள் மாணவர்களும் சக ஆசிரியர்களும் பின்னர் அவற்றைப் பார்க்க முடியும்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • உங்கள் பாடத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

    வலுவற்ற இணைய இணைப்புகள் உள்ள இடங்களில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதால் இணைய வேகம் குறையாது. மாணவர்கள் பின்னர் பார்க்க வசதியாக உங்கள் பாடங்களை ரெக்கார்டு செய்து Classroomமில் இடுகையிடலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்

விர்ச்சுவல் வகுப்பறையை நான் எவ்வாறு கையாள்வது?

  • உங்கள் முதல் வீட்டுப்பாடத்தை Google Classroomமில் உருவாக்குங்கள்

    Google Classroom மூலம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடங்களை உருவாக்கி ஒருங்கிணைக்கலாம், கருத்துகளை வழங்கலாம், மேலும் தங்கள் வகுப்பில் உள்ளவர்களுடன் கலந்துரையாடலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • இந்திய பள்ளிக்கு Google Workspace அமைக்கும் உதாரணம்

    பள்ளி ஆசிரியர்கள் Google Workspace ல் உள்ள பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, தங்கள் வகுப்புடன் எவ்வாறு இணைகிறார்கள் என்று பார்த்து கற்று கொள்ளுங்கள்

    பயிற்சி
  • Google Slides மூலம் உங்கள் பாடத்தை வழங்குங்கள்

    Google Slides மூலம் உங்கள் பாடங்களை சுவாரசியமாக மாற்ற பல்வேறு விளக்கக்காட்சித் தீம்கள், உட்பொதிக்கப்பட்ட வீடியோ, அனிமேஷன்கள் மற்றும் பல அம்சங்களைப் பயன்படுத்தலாம்

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • Google Docsஸில் உருவாக்குங்கள், பகிருங்கள் & திருத்துங்கள்

    Google Docs மூலம் நிகழ்நேரத்தில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம். ஆவணங்களை உருவாக்குவது, திருத்துவது, பகிர்வது, அச்சிடுவது ஆகிய அனைத்தையும் ஒரே இடத்திலேயே செய்யலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்

பாடங்களை அனைவரும் அணுகும் வகையில் தருவது எப்படி?

  • உடனடி வசனங்களைப் பயன்படுத்துங்கள்

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கவனம் செலுத்த உதவுவதற்கு Meet, Slides ஆகியவற்றில் வசனங்களைப் பயன்படுத்தலாம்

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • உரையைச் சத்தமாகப் படிக்க ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்துங்கள்

    Chromebooks, Google Workspace ஆகியவற்றில் உள்ளமைந்துள்ள ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்திப் பார்வையற்ற அல்லது பார்க்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • Chromebookகின் அணுகல்தன்மை அம்சங்கள் பற்றி அறிக

    Chromebookகுகளில் உள்ளமைந்துள்ள அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்துவது குறித்து உங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • Google Workspaceஸில் உள்ள அணுகல்தன்மை அம்சங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

    குரல் உள்ளீடு, பிரெய்ல் ஆதரவு போன்ற Google Workspaceஸில் உள்ள உதவிகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, உங்கள் மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்

எனது மாணவர்களை எவ்வாறு ஈடுபாடுடன் வைத்துக்கொள்வது?

  • YouTube கற்றுக்கொள்ளும் இடம்

    இனி வரும் நாட்களில் குடும்பத்தினர்களும், பெற்றோர்களும் மகிழ்வூட்டும் விதத்தில் கல்வியை கற்பிக்க உதவி ஆவணங்களும், செயல்பாடுகளையும் உள்ளன.

    திறந்திடுங்கள்
  • 1:1 அமர்வுகளை ஏற்பாடு செய்யுங்கள்

    உங்களுடன் நேருக்கு நேராகவோ குழுவுடன் சேர்ந்தோ பேசுவதற்கான அமர்வுகளை மாணவர்கள் முன்பதிவு செய்யும் வகையில் Google Calendarரில் அப்பாயிண்ட்மெண்ட் நேரப்பிரிவுகளை அமைக்கலாம்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • Read Along

    கற்கவும், படிக்கும் பயிற்சி எடுக்கவும் பிள்ளைகளை ஊக்குவிக்க பேச்சு அடிப்படையில் உருவாக்கப்பட்ட படிக்கும் ஆப்

    திறந்திடுங்கள்
  • Google Arts & Culture

    உலகின் மிகவும் பிரபலமான கண்காட்சியை பார்வையிடுங்கள், உலக அதிசயங்களின் கலை மற்றும் வரலாறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    திறந்திடுங்கள்

பள்ளிகளுக்கானவை

இந்த இணையதளத்தில் பரிந்துரைத்தவற்றைப் பயன்படுத்திப் பார்க்க, உங்களிடம் Google Workspace for Education கணக்கு இருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள தகுதிபெறும் பள்ளிகளுக்கு Google Workspace for Education எந்தக் கட்டணமும் இல்லாமல் கிடைக்கும்.

எனது பள்ளிக்கு Google Workspace for Education கணக்கைப் பெறுவது எப்படி?

  • படி 1 - பதிவு செய்தல்

    உங்கள் பள்ளியைப் பதிவு செய்வதற்கான படிவத்தை நிறைவு செய்யுங்கள். இந்த டொமைன் உங்களுக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்துங்கள். அங்கீகாரம் கிடைக்க சில நாட்கள் ஆகலாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

    பயிற்சி
    பதிவு செய்க
  • படி 2 - பயனர்களை உருவாக்குதல் & அமைப்பை வரையறுத்தல்

    அமைப்புகளையும் கொள்கைகளையும் பயன்படுத்துவதற்கு ஒரு நிர்வாக அமைப்பைத் தீர்மானியுங்கள். அத்துடன் பயனர்களின் csv கோப்பினையும் பதிவேற்றுங்கள்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • படி 3 - அமைப்புகளை உள்ளமைத்தல்

    எந்தெந்தப் பயனர்கள் எந்தெந்தச் சேவைகளை அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்வதுடன் அமைப்புகளை எளிதாகப் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்.

    பயிற்சி
    திறந்திடுங்கள்
  • படி 4 - பயிற்சி அளித்தல்

    கல்விக்கு எல்லை இல்லை. Google for Education ஆசிரியர் மையத்தில் தொழில்நுட்பப் பயிற்சியையும் கல்வியாளர்களுக்கான உதவி ஆவணங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

    திறந்திடுங்கள்

எனது பள்ளிக்கு தேவையான Chromebooks பெறுவது எப்படி?

  • ஸ்டெப் 1 – Chromebooks மற்றும் Chrome Education Upgrade வாங்குதல்

    முதலில், ஒரு Chromebook தயாரிப்பாளர், ரீசெல்லர் அல்லது Google for Education டீமை தொடர்புகொண்டு, மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர் உடன் Chromebooks வாங்கிடுங்கள்.

    எங்களை தொடர்பு கொள்க
  • ஸ்டெப் 2 – உங்கள் சாதனங்களை பதிவு மற்றும் செட் செய்தல்

    உங்களது Chromebooks மற்றும் Chrome Education Upgrades கையில் கிடைத்தவுடன், அவற்றை பதிவு செய்து, உடனே செட்அப் செய்யுங்கள், அல்லது பயனாளர்களே நேரடியாக பதிவு செய்யும் வகையில் திட்டமிடுங்கள்.

    திறக்கவும்
  • ஸ்டெப் 3 – உங்களது சாதனத்தின் பாலிசிகள் மற்றும் அமைப்புகளை நிர்வகித்தல்

    Google அட்மின் கன்சோல் மூலம், Wi-Fi அமைப்புகள், முன்கூட்டியே-இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஆப்களை தேர்வு செய்தல், ஆட்டோ அப்டேட் மூலம் Chrome ஆபரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய வெர்ஷனுக்கு உங்கள் சாதனத்தை தயார்படுத்துதல் போன்ற 200க்கும் மேற்பட்ட பாலிசி அமைப்புகளை உங்களால் கான்ஃபிகர் செய்ய முடியும்.

    திறக்கவும்
  • ஸ்டெப் 4 – Chromebooks-ஐ வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதித்தல் அல்லது பள்ளியிலேயே வைத்திருத்தல்

    Chromebooks-ஐ மாணவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் தயார்படுத்தலாம் அல்லது அவற்றை பள்ளியிலேயே பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம்.

    திறக்கவும்

குடும்பத்திற்கானவை

இப்போது பள்ளிப் பாடம் வீட்டிலேயே நடைபெறுவதால் மாணவர்கள் முன்பைவிட அதிகமாக ஆன்லைனில் நேரத்தைச் செலவிடுகின்றனர். பிள்ளைகளின் தொழில்நுட்ப உபயோகத்தை நிர்வகிக்கவும் ஆதரிக்கவும் குடும்பங்களுக்கு உதவக்கூடிய உதவிக்குறிப்புகளையும் கருவிகளையும் இங்கே பாருங்கள்.

பள்ளி செயல்பாடுகளுக்காக என் பிள்ளை பயன்படுத்தக்கூடிய தொழிநுட்பத்தைப் பற்றி நான் எவ்வாறு கற்றுக்கொள்வது?

  • Google கருவிகளைப் பற்றி அறிக

    ஆசிரியர்களும் மாணவர்களும் Chromebookகுகள் முதல் Google Workspace for Education வரையிலான Google தயாரிப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள காப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வாசியுங்கள்.

    திறந்திடுங்கள்
  • வீட்டு உபயோகத்துக்கேற்றபடி Chromebookகைத் தயார் செய்யுங்கள்

    வீட்டில் பயன்படுத்த வசதியாக உங்கள் பிள்ளையின் Chromebookகில் உள்ளமைந்துள்ள அனைத்து அம்சங்களையும் எவ்வாறு அமைத்துப் பயன்படுத்துவது என அறிக.

    திறந்திடுங்கள்
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அணுகல்தன்மை அம்சங்களைக் கண்டறியுங்கள்

    உங்கள் பிள்ளைக்குக் குறிப்பிட்ட தேவை இருந்தாலோ அல்லது அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலோ Google Workspace, Chromebook ஆகியவற்றில் உள்ளமைந்த அணுகல்தன்மை அம்சங்களைக் கண்டறிவதன் மூலம் அவருக்கு உதவுங்கள்

    திறந்திடுங்கள்
  • பள்ளிப் பாடத்தைச் செய்ய உதவி பெறுங்கள்

    உயர்நிலை & கல்லூரி அளவிலான பாடங்களை மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு, Google AI தொழில்நுட்பத்தில் இயங்கும் Socratic கல்வி ஆப்ஸைப் பயன்படுத்துங்கள்.

    மேலும் அறிக
    பதிவிறக்குங்கள்

எனது பிள்ளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் அவர் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதையும் நான் எவ்வாறு கையாள்வது?

  • ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்குங்கள்

    ஆன்லைனில் உங்கள் பிள்ளை கற்கும்போதும் விளையாடும்போதும் பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போதும் அவருக்கு வழிகாட்டுவதற்கான அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைக்க Family Link ஆப்ஸைப் பயன்படுத்துங்கள்.

    மேலும் அறிக
  • டிஜிட்டல் உலகில் ஒன்றாகப் பயணியுங்கள்

    ஆக்கப்பூர்வமான உரையாடல்களைத் தொடங்குவதற்கும் உங்கள் மொத்தக் குடும்பத்திற்கும் ஏற்ற ஆரோக்கியமான பழக்கங்களை அடையாளம் காண்பதற்கும் ஒரு வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம்.

    மேலும் அறிக

எனது பிள்ளை கற்பதற்குத் தேவையான கூடுதல் உள்ளடக்கத்தை நான் எங்கு கண்டறிவது?

  • உங்கள் குடும்பத்தை மகிழ்வூட்டும் சாகசத்தைத் தேர்வுசெய்யுங்கள்

    Google Arts and Culture மூலம் சுவாரசியமான விஷயங்களையும் அற்புதமான செயல்பாடுகளையும் ஆச்சரியமூட்டும் கதைகளையும் ஒன்றாகக் கண்டறியுங்கள்.

    திறந்திடுங்கள்
  • குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான கல்வி ஆவணங்கள்

    பெற்றோர்களும் காப்பாளர்களும் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற துணை உள்ளடக்கத்தையும் செயல்பாடுகளையும் YouTubeல் கண்டறியலாம்.

    திறந்திடுங்கள்
  • வீட்டில் செய்து பார்க்கக்கூடிய வேடிக்கையான கோடிங் செயல்பாடுகள்

    பிள்ளைகள் CS Firstடைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு உதவும் வகையிலான இந்த வழிகாட்டியைப் பெற்றோர்களும் காப்பாளர்களும் பயன்படுத்தலாம். இது செய்முறைப் பயிற்சிகள் மூலம் கோடிங்கைக் கற்பிக்கக்கூடிய சுவாரசியமான வீடியோ-சார்ந்த பாடத்திட்டம் ஆகும்.

    பயன்படுத்திப் பாருங்கள்

எனது பிள்ளையின் பள்ளியை நான் எவ்வாறு தொடர்புகொள்வது? நான் வேறு மொழி பேசுபவராக இருந்தால் என்ன செய்வது?

  • Google Meet மூலம் அழைப்புகளை ஏற்பாடு செய்யுங்கள்

    நீங்களும் உங்கள் பிள்ளையும் ஆசிரியர்களுடன் பேசுவதற்கு Meetடைப் பயன்படுத்தி ஆடியோ & வீடியோ அழைப்புகளை அமைக்கலாம்.

    திறந்திடுங்கள்
  • Google Translate மூலம் தடையின்றி உரையாடுங்கள்

    உங்கள் மொபைலில் உரையாடல்களை மொழிபெயர்த்திடுங்கள் அல்லது கேமராவின் மூலம் சொற்களையோ ஆவணங்களையோ மின்னஞ்சல்களையோ மொழிபெயர்த்து மொழிப் பிரச்சனை இல்லாமல் கருத்துகளைப் பரிமாறுங்கள்.

    திறந்திடுங்கள்
  • மொழிபெயர்ப்புப் பயன்முறையைப் பயன்படுத்துங்கள்

    Google Assistantடின் மொழிபெயர்ப்புப் பயன்முறையை உபயோகித்து உங்கள் மொபைலிலோ வேறு ஸ்மார்ட் சாதனத்திலோ உரையாடல்களை மொழிபெயர்த்திடுங்கள்.

    திறந்திடுங்கள்

  • சக பணியாளர் சமூகங்கள்

    உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் இணைவதற்கும் பகிர்வதற்கும் உங்கள் ஊரில் உள்ள ஒரு Google கல்வியாளர் குழுவில் சேருங்கள்.

    மேலும் அறிக
  • விர்ச்சுவல் அலுவலக நேரம்

    எங்கள் விர்ச்சுவல் அலுவலகம் செயல்படும் நேரங்களிலும் வாராந்தர Twitter அரட்டைகளிலும் #TeachFromHome உரையாடல்களில் சேருங்கள்.

    சேருங்கள்

கூடுதல் உதவியும் உத்வேகமும்

  • தொலைதூரக் கல்விக்கு உதவக்கூடிய கூடுதல் விஷயங்களைக் கண்டறியுங்கள்

    தயாரிப்பு தொடர்பான பயிற்சி, வலைக்கருத்தரங்குகள், Google for Education குறித்த சமீபத்திய அறிவிப்புகள் ஆகியவற்றை COVID-19 உதவித் தொகுப்புப் பக்கத்தில் அணுகலாம்.

    திறந்திடுங்கள்
  • கூடுதல் உதவியைப் பெறுங்கள்

    தயாரிப்பு தொடர்பான நிபுணர்களிடம் கேள்விகள் கேட்டு நேரடியாகத் தொடர்புகொள்ள Google for Education உதவி மையத்திற்கும் தயாரிப்பு குறித்த மன்றங்களுக்கும் செல்லலாம்.

    திறந்திடுங்கள்

எங்கும் கற்பிக்கலாம் பற்றிய அறிமுகம்

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் உலகெங்குமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற இக்கட்டான சூழலில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொலைதூரக் கல்வியை எளிதாக மேற்கொள்ளக்கூடியதாகவும் நிறைய பேர் அணுகக்கூடியதாகவும் மாற்றலாம்.

Google-முன்னெடுப்புத் திட்டமான எங்கும் கற்பிக்கலாம், உங்கள் கல்விக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த நேரமானாலும், எந்தச் சாதனம் மூலமும் பயிற்றுவித்தலையும் கற்றலையும் பிறருடன் இணைந்து மேற்கொள்ளும் வகையில் எங்கள் பாதுகாப்பான கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த இடையூறு நேர்ந்தாலும் கல்வியைத் தொடரலாம். இந்தக் கருவிகள் எந்தக் கட்டணமும் இல்லாமல் கிடைக்கப் பெறுகின்றன.

எங்கள் உள்ளூர் கூட்டாளர்கள் (பார்ட்னர்ஸ்)

  • FICCI Arise

    FICCI Arise

    அரசு மற்றும் தனியாரின் முயற்சிகள் மூலம் கற்றல் பலன்களின் தரத்தை உயர்த்தவும், எந்த மாணவரையும் இம்முயற்சியில் விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதை தனது பார்வையாக கொண்டுள்ளது FICCI ARISE. இது பள்ளி கல்வி-யின் பல அம்சங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பங்குதாரர்களின் நிர்வாகம் ஆகும்