வலை வழங்கி
Appearance
வலை வழங்கி (web server) என்பது அடிப்படை தகவல்தொடர்பு நெறிமுறையான மீயுரை பரிமாற்ற நெறிமுறையை பயன்படுத்தி கோரிக்கைகளை செயல்படுத்தும் ஒரு கணினி அமைப்பு ஆகும். இது உலகளாவிய வலையில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வலை வழங்கி என்ற பதம் மொத்த கணினி அமைப்பையோ அல்லது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மேற்பார்வை செய்யும் மென்பொருளையோ குறிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. [1]
வலை வழங்கியின் மிக பொதுவான பயன்பாடு வலைத்தளங்களை (அவை சம்மந்தப்பட்ட கோப்புகளை) சேமித்து, பயனர்களுக்கு வழங்குவதாகும். அதன் மற்ற பயன்பாடுகள் விளையாட்டு, தரவு சேகரிப்பு, நிறுவன செயலிகளை இயக்குதல், மின்னஞ்சல் கையாளுதல், கோப்புப் பரிமாற்ற நெறிமுறை, மற்றும் பல வலை சார்ந்த பயன்பாடுகள்
மேலும் பார்க்க
[தொகு]- வலைச் செயலி
- பொதுவான கேட்வே இடைமுகம், பி.எச்.பி, ஜாவா சர்வர் பேஜஸ், ஏஎஸ்பி.நெட்
- இணையப் புரவல் சேவை
- வலைத்தள சேவை
சான்றுகள்
[தொகு]- ↑ "What is web server?'". webdevelopersnotes. 2010-11-23. பார்க்கப்பட்ட நாள் 2014-12-20.