முத்தம்
முத்தம் (Kiss) என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.[1][2] மேலும் வயது வந்த ஆடவர் முத்துமிடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomas, Keith (11 June 2005). "Put your sweet lips...". The Times (London). http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/article531696.ece.
- ↑ Marvin K. Opler, "Cross-cultural aspects of kissing", Medical Aspects of Human Sexuality, Vol. 3, No. 2, February 1969, pp. 11, 14, 17, 20–21]