உள்ளடக்கத்துக்குச் செல்

வாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாரி, பெயர்ச்சொல்.
  1. சீப்பு
  2. குப்பை வாரும் கருவி; குப்பைவாரி (வாரியல் = துடைப்பம்)
  3. ஒரு முறையில் அல்லது வகுப்பு அல்லது பகுப்பு என்னும் நோக்கில் தொகுத்துக்கூற வருஞ் சொல். எ.கா வகுப்புவாரி, ஊர்வாரியாக, மொழிவாரியாக
  4. மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி
  5. கூரைமுனையில்வைத்துக்கட்டுங் குறுக்குக் கழி
  6. கூரையினின்று வடியும் நீரைக்கொண்டுசெல்லுங் கால்
  7. தோணிப்பலகை
  8. மடை
  9. நீர், நீர்நிலை
  10. வெள்ளம். வணிக மாக்களை யொத்ததவ் வாரியே (கம்பரா.ஆற்றுப். 7)
  11. கடல் (வாரிதி = கடல்)
  12. நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம்
  13. நூல் (தொகுத்துத் தரும் நூல்)
  14. கலைமகள்
  15. வீணைவகை
  16. இசைக்குழல்
  17. யானையகப்படுத்துமிடம். வாரிக்கொள்ளா . . . வேழம் (மலைபடு. 572)
  18. யானைக்கட்டுங்கயிறு
  19. யானைக்கொட்டம். (யானைகளைக் கட்டி நிறுத்தி வைத்திருக்கும் இடம்) குஞ்சரம் . . . மதிட்புடை நிலை வாரிகள்(சீவக. 81)
  20. வாயில் (உள்நுழை வாயில், வரும் வழி)
  21. கதவு
  22. வழி
  23. தடை
  24. மதில், மதிற்சுற்று; வடவரை நிவப்பிற் சூழவாரியாப் புரிவித்து (கந்தபு. அசுரர்யாக. 36)
  25. செண்டுவெளி. குஞ்சரம் வாரியுள் வளைத்தவே (சீவக. 275).
  26. பகுதி
  27. வருவாய். புயலென்னும் வாரி (குறள், 14).
  28. விளைவு. எ.கா: மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும்
  29. தானியம்
  30. செல்வம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. comb
  2. rake
  3. suffix meaning `according to'
  4. pole for tightening a package or pack
  5. lath tied lengthwise atthe edge of a thatched roof
  6. channel fordraining off the rain water from a roof; water-way
  7. plank across a dhoney
  8. luice
  9. water
  10. flood
  11. sea
  12. reservoir of water
  13. literary work
  14. Sarasvati
  15. A kind of lute
  16. flute; pipe
  17. kheddha
  18. rope for tying an elephant
  19. elephant-stable
  20. entrance
  21. door
  22. path
  23. impediment,obstruction
  24. wall, fortification
  25. stadium
  26. portion
  27. income, resources
  28. produce
  29. grain
  30. wealth
விளக்கம்
  • மிகப்பல சொற்கள் வருதல், சேர்தல், திரள்தல் கூடுதல் என்னும் பொருளடிபப்டையில் வருவன. எ.கா கூரையினின்று வடியும் நீரைக்கொண்டுசெல்லுங் கால் என்னும் பொருள் நீரைத் திரட்டி எடுத்துச் செல்லும் கால் என்னும் பொருள் தருவது. கடல், செல்வம், யானை கட்டும் இடம், அறிவுத்திரளுக்குக் கடவுளான கலைமகள் (கலைகளில் இருப்பிடம், கலைகள் சேர்ந்திருப்பதைக் குறிக்கும்), விளைவு, என்னும் சொற்களும் சேர்தல், திரள்தல், கூடுதல் என்னும் பொருள்களின் அடிபப்டையாக வருவன. குப்பையைச் சேர்த்து அள்ள உதவும் வாரி, தலைமுடியை ஒழுங்காக சேர்த்து வாருவதற்கு உதவும் சீப்பு இப்படி எல்லாச் சொற்களும் அடியான வேர்ப்பொருள்கள் சிலவற்றைப் பற்றியே எழுவன.
பயன்பாடு
  • ([])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வாரி , (வி)

வாரி என்னும் ஏவல் வினை.
  1. தடு
  2. ஆணையிட்டுக் கூறு
  3. நடத்து. பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை,பக். 91)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. hinder, obstruct
  2. asseverate, swear
  3. conduct, drive, as a horse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சீப்பு - வாரு - கடல் - அணியறை - மடை - நீர்நிலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரி&oldid=1443763" இலிருந்து மீள்விக்கப்பட்டது