கண்ணேறு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கண்ணேறு, பெயர்ச்சொல்.
- (கண்+ஏறு)
- கண்ணூறு
- திருஷ்டிதோஷம்
- (எ. கா.) அந்திநின்று கண்ணூ றழித்தா ளணிநீ றளித்தே (தணிகைப்பு. களவு. 329).
- கண்திருஷ்டி
- தீய கண்பார்வை.... பிறர் பொறாமை, வயிற்றெரிச்சல் பட்டு ஒருவரைப் பார்க்கும் கண்பார்வையால் அவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும் தீங்கு
விளக்கம்
[தொகு]- தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றும் கூறுவர்
பயன்பாடு
[தொகு]- “மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா?” என்றாள். “அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன?” என்றாள் சத்யசேனை (வெண்முரசு, மழைப்பாடல் 81, ஜெயமோகன்)
- குழந்தை கண்ணேறுப்பட்டு மிக இளைத்துவிட்டது. கண்ணேறு கழிக்க உப்பும், மிளகும் கொண்டுவா திருஷ்டி சுற்றிப்போடலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- evil eye blight of the eyes causing sickness or misfortune
- தெலுங்கு
- இந்தி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +