உள்ளடக்கத்துக்குச் செல்

அணங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அணங்கு, (பெ)

  1. வருத்தம். (திருமுரு. 289.)
  2. நோய். (பிங். )
  3. அச்சம். (சூடாமணி நிகண்டு)
  4. மையல் நோய். (திவா.)
  5. கொலை. (பிங். )
  6. தெய்வம். (தொல். பொ. 256.)
  7. தெய்வமகள். (திவா.)
  8. வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள்., 918; மணி. 6, 135.)
  9. தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங். )
  10. பேய்
  11. வெறியாட்டு
  12. கீழ் சாதிக்காரன். (பிங். )
  13. அழகு. (பிங். )
  14. வடிவு
  15. குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).

(வி)

  1. வருந்துதல்
  2. இறந்துபடுதல்
  3. பின்னிவளர்தல்
    • முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223)
  4. பொருந்துதல்
    • உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை)
  5. ஒலித்தல்

(செயப்படுபொருள் குன்றா வினை )

  1. வருந்துதல்
    • புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம், n.

  1. pain, affliction, suffering
  2. disease
  3. fear
  4. lust
  5. killing
  6. deity
  7. Celestial damsel
  8. Demoness that takes away one's life by awakening lust or by other means
  9. Beautiful woman, as resembling a celestial damsel
  10. devil
  11. Dancing under religious excitement, esp. possession by Skanda
  12. Low-caste person
  13. beauty
  14. form
  15. Young offspring

வினைச்சொல்

  1. To suffer, to be distressed
  2. To die, to be slain
  3. To interlace in growing together, as bamboos
  4. To be joined, united
  5. To sound, make noise

(செயப்படுபொருள் குன்றா வினை )

  1. To afflict


அணங்குகிற/வருந்துகிறச் சிறுவன்

விளக்கம்

[தொகு]
  • அணங்குதல் என்னும் வினைச்சொல் ஒலித்தல், விரும்புதல், அண்டுதல், அஞ்சுதல், வருந்தல், வருத்துதல், நோயுறுதல் போன்று பல பொருள்களில் இலக்கியத்தில் வழங்கப்படுகிறது.

பயன்பாடு

[தொகு]
  • அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள் 1081)
  • நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
    தானைக்கொண் டன்னது உடைத்து (குறள் 1082)
  • பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182)



( மொழிகள் )

சான்றுகள் ---அணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணங்கு&oldid=1971168" இலிருந்து மீள்விக்கப்பட்டது