Gmailலின் சிறந்த அம்சங்களான வலுவான பாதுகாப்பு, நிகழ்நேர அறிவிப்புகள், ஒரே நேரத்தில் பல கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி, உங்கள் மின்னஞ்சல் முழுவதிலும் தேடும் வசதி ஆகியவற்றை Android மொபைலிலும் டேப்லெட்டிலும் அதிகாரப்பூர்வ Gmail ஆப்ஸ் வழங்குகிறது. Wear OSஸிலும் Gmailலைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் செயல்திறன்மிக்கவர்களாக இருப்பதோடு வாட்ச்சில் இருந்தே மின்னஞ்சல்களை நிர்வகிக்கலாம்.
Gmail ஆப்ஸ் மூலம், நீங்கள்:
• 99.9 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர், ஆபத்தான இணைப்புகள் ஆகியவை அடங்கிய மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸை வந்தடையாமல் தானாகவே தடுக்கலாம்
• சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தவறுகளைத் தவிர்க்க, அனுப்பிய மின்னஞ்சலைச் செயல்தவிர்க்கலாம்
• பிறருடன் இணையவும், உருவாக்கவும், கூட்டுப்பணியாற்றவும் Google Chatடை இயக்கலாம்
• ஸ்பேஸ்களில் குழுவாக இணைந்து பலவற்றைச் செய்யலாம். இது நபர்கள், தலைப்புகள், திட்டப்பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான பிரத்தியேக இடம்
• Google Meet மூலம் உயர்தர வீடியோ அழைப்பைச் செய்யலாம்
• ஸ்மார்ட் ரிப்ளை பரிந்துரைகள் மூலம் மின்னஞ்சல்களுக்கு விரைவாகப் பதிலளிக்கலாம்
• பல கணக்குகளுக்கு இடையே எளிதாக மாறலாம்
• ஃபைல்களை எளிதாக இணைக்கலாம் பகிரலாம்
• அறிவிப்பு மையம், பேட்ஜ், பூட்டுத் திரை விருப்பங்கள் ஆகியவற்றின் மூலம் புதிய மின்னஞ்சல் அறிவிப்புகளை விரைவாகப் பெறலாம்
• உடனடி முடிவுகள், டைப் செய்யும்போதே காட்டப்படும் கணிப்புகள், எழுத்துவரிசை குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றின் மூலம் மின்னஞ்சலை விரைவாகத் தேடலாம்
• லேபிளிடுதல், நட்சத்திரமிடுதல், நீக்குதல், ஸ்பேம் மெசேஜைப் புகாரளித்தல் ஆகியவற்றின் மூலம் மின்னஞ்சலை ஒழுங்கமைக்கலாம்
• உங்கள் இன்பாக்ஸை விரைவாகக் காலியாக்குவதற்கு மின்னஞ்சலை ஸ்வைப் செய்து காப்பகப்படுத்தலாம்/நீக்கலாம்
• மெசேஜ் தொடர் உரையாடல்களாக மின்னஞ்சலைப் படிக்கலாம்
• டைப் செய்யும்போதே Google தொடர்புகள் அல்லது மொபைல் தொடர்புகளில் உள்ள பெயர்களைத் தானாக நிரப்பலாம்
• ஆப்ஸில் இருந்தே Google Calendar அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்
• உங்கள் மின்னஞ்சல்களின் விரைவான மேலோட்டப் பார்வையைப் பெற உங்கள் Wear OS வாட்ச்சில் Gmail காட்சிப்பகுதியையும் கட்டத்தையும் சேர்க்கலாம்
Google Workspaceஸின் அங்கமான Gmail மூலம் உங்கள் குழுவில் இருப்பவர்களும் நீங்களும் எளிதாக இணையலாம், உருவாக்கலாம், கூட்டுப்பணியாற்றலாம். நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
• Gmailலில் இருந்தே Google Meet அல்லது Google Chat மூலம் உடன் பணிபுரிபவர்களுடன் இணையலாம், Calendar அழைப்பை அனுப்பலாம், பணிப் பட்டியலில் ஒரு செயலைச் சேர்க்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்
• ஸ்மார்ட் ரிப்ளை, ஸ்மார்ட் கம்போஸ், இலக்கணப் பரிந்துரைகள், நினைவூட்டல்கள் போன்ற பரிந்துரைக்கப்படும் செயல்களைப் பயன்படுத்தலாம். இவை பணிகளைச் சிறப்பாகச் செய்யவும் எளிய பணிகளை முடிக்கவும் உதவும். இதனால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
• பாதுகாப்பாக இருக்கலாம். 99.9 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர் ஆகியவை அடங்கிய மின்னஞ்சல்கள் எங்கள் பயனர்களைச் சென்றடையாமல் எங்கள் மெஷின் லேர்னிங் மாடல்கள் அவைகளைத் தடுக்கின்றன
https://workspace.google.com/products/gmail/ என்ற இணைப்பில் Google Workspace குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
கூடுதல் தகவலுக்கு இவற்றில் எங்களைப் பின்தொடருங்கள்:
Twitter: https://twitter.com/googleworkspace
LinkedIn: https://www.linkedin.com/showcase/googleworkspace
Facebook: https://www.facebook.com/googleworkspace/
புதுப்பிக்கப்பட்டது:
25 நவ., 2024